எங்களுக்கும் மனசிருக்கு

ஒரு பேருந்தில் இரு நண்பர்கள்
சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள்
இருவரும் ஒரு நேர்முக தேர்வுக்க சென்று கொண்டிருந்தார்கள்.

ஒரு நிறுத்தத்தில் 3 திருநங்கைகள் ஏறினார்கள்
எல்லோரிடமும் கை நீட்டி காசு தருமாறு கேட்டார்கள்
நண்பனில் ஒருவன் எதாவது பேசிவிடுவார்களோ என்று பயந்து தான் வைத்திருந்த 200 ரூபாயை
எடுத்துகொடுத்து விட்டான்.

அதில் ஒருவர் எம்ப ரெண்டு பெரும் எங்க போறீங்க என்று கேட்க வேலை தேடி செல்வதாய் சொன்னதும், தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து, நீங்களே பாவம் வேலை தேடி போறீங்க.
நாங்க வயத்து பசிக்காக காசு கேகறோம். நீங்க எதிர்காலத்துகாக வேலை தேடி போறீங்க. நாங்க அந்த அளவு மனசாட்சி இல்லாதவங்க இல்லப்பா. எங்களுக்கும் மனசு இருக்கு. எங்களுக்கு வேலை கிடைக்காததால தான் இந்த மாதிரி காசு கேக்கறோம். இந்தாப்பா உன் காசு என்று கூறி கொடுத்து விட்டு இறங்கி சென்றார்கள்.
அவர்களை பற்றி அவன் மனதில் இருந்த தாழ்ந்த எண்ணம் அந்த நொடியே மறைந்தது.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (12-Jun-14, 2:31 pm)
பார்வை : 344

மேலே