அக்கரை பச்சையில்லை

குளிர் காற்று சில்லென்று இருக்க எந்தவித சொரணையுமின்றி படுத்துக்கிடந்தான் தாமோதரன்.ஆரம்பத்தில் புதிய நாடு புதிய மொழி புதிய சூழல் அனைத்தும் அவனுக்குப் பிடித்திருந்தது் காலம் செல்லச் செல்ல அந்த நாட்டின்மேல் பிடிப்பற்றுப் போனது.இதற்குக் காரணம் அந்நாட்டவர்கள் தன்னை ஒரு அடிமை போன்று நடத்துவதுமாகும்.அடிக்கடி என்ன வாழ்க்ைகடா இது என வருந்திக் கொள்வான்.
வௌ்ளைக் காரனக்குப் பயந்து சலாம் போடுவதும் அவனது பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆட்பட்டு மனநோவதும் நாளாந்த விடயமாகி வெறுப்பாகி இருந்தது அவனது உள்ளம்.ஆறுதல் சொல்ல குடும்பமோ சுற்றத்தாரோ இரக்கப்பட்டு கருணை காட்ட அங்கு யாருமே இருக்கவில்லை.
தனது நாட்டில் ஏற்பட்ட கலவரத்திலுருந்து தப்பிப்பதற்காக படகு மூலம் உயிரை கையில் பிடித்துக்ெகாண்டு வந்திருநதான். வந்த அன்று அவன'உள்ளம் ,இனி நல்லா உழைக்கலாம் சுகபோகமாக வாழலாம் என்றுதான் நினைத்திருந்தான்.பாவம் சில நாட்களிலேயே உறவுகளின் ஏக்கம் அவனை வாட்டத்தொடங்கியது.
கூழோ கஞ்சியோ எதுவாக இருந்தாலும் எவ்வளவு சந்தோசமக உண்டோம்.உடன் பிறந்தவர்களுடன் பங்கிட்டுச் சாப்பிடுவது எவ்வளவு சந்தோசமாக இருந்தது.அன்று உணவு சுவைக்காட்டாலும் எவ்வளவு மனநிரைவாக இருந்தது.ஆனா இங்கு உணவு சுவைத்தாலும் மன நிவைுபெறவில்லையே என நினைத்துக் கொண்டான்.
ஊரில் நண்பர்களோடு சேர்ந்து பனைமரத்தடியில் கிட்டிப் புள் விளையாடுவதும் விளையாட்டாய் சண்டையிடுவதும் கடலில் குளிப்பதும் பனை நுங்கு வெட்டிச் சாப்பிடுவதும் எவ்வளவு இனிமையான நினைவுகள்.மாலை நேரங்களில் வகுப்புக்குச் செல்லும் பெண்பிள்ளைகளை பகிடி பன்னுவதும் கற்பனையிர் காதல் செய்வதும் அப்பப்பா எவ்வளவு சுகமான அனுபவங்கள். இனி இப்படியான சொர்க்க வாழ்க்ைக வருமா?
பாழாய்ப் போன யுத்தம் எமது உறவுகளை பிரித்துவிட்டதே.நாம் என்னபாவம் செய்தோம் உறவுகளை இழந்து தவிக்கிறோமே!
அவன் இந் நாட்டுக்கு வரும்போது தனது அம்மாவும் அக்காவும் மட்டுமே தனது குடும்பத்தில் எஞ்சி இருந்தனர்.தனது அப்பா சண்டையின் போது குண்டடிபட்டு இறந்திருந்தார். அதனால் குடும்பப் பொறுப்பு அனைத்துமே அவன் கைக்கு கைமாறி இருந்தது.
அப்பா சிறு தோட்ட தொழிலாளி வெங்காயம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே குடும்பத்தை கொண்டு சென்றார்.அப்பாவின் மறைவுக்குப்பின் சில காலம் தாமோதரன் அப்பாவின் தொழிலைச் செய்துவந்தாலும் அதன் வருமானம் உண்ணக் குடிக்க மட்டுமே போதுமாக இருந்தது.வயதுக்கவந்த அக்காவை எப்படி கரை சேர்ப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம் தாமோதரத்தின் உறவினர் ஒருவர் இந்த வௌிநாட்டுவிடயத்தை எடுத்துக் கூறினார். அடிக்கடி இரானுவத்தால் அழைத்துச்செல்லப்படுவதும் விசாரிக்கப்படுவதுமாக இருந்ததால் வௌி நாடு செல்வது உசிதம் எனப்பட்டது.அம்மாவும் மகனை பிரிய மனம் இல்லாவிட்டாலும் குடும்ப நிலை நாட்டின் நிலை கருதி மனமின்றிச் சம்மதித்தார்.
அடுத்த போக வெங்காயச் செய்கைக்கு வைத்திருந்த பணத்தையும் அக்காவின்ற கையில கழுத்தில கிடந்த நகையெல்லாம் விற்று படகுக் காரனுக்குக் கொடுத்தே இங்கே வந்திருந்தான்.
தொலைபேசி மணி அடிக்க சிந்தனையைிலிருந்து வடுபட்டவனாக தொலைபேசியை அவதானித்தான்.அம்மாதான் நாட்டிலிருந்து தொடர்புகொண்டிருந்தார்.
தாமோதரன்,ஆவலோடு அம்மா!!...என்று பாசத்தோடு அழைத்தவனாக அம்மாவின் குரல் கேட்க இடைவௌிவிட்டு மௌனமானான்.மகன் சாப்பிட்டிங்களா?சுகமா இருக்கிங்களா என்ற அழுகுரளுடனேயே பாசமாக தழுதழுத்த குரலில் வினவ தாமோரன் வாய்விட்டு அழுதேவிட்டான்!
அம்மா நீங்க சுகமா இருக்கீங்களா?சாப்பிட்டியலா?அக்கா என்ன செய்ரா என்று பாசத்தோடு வினாக்களை அடுக்கிக் கொண்டே போனான்.
அம்மா தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவராக ஓம் மவன் நாங்க இங்க சொகமா இருக்கம். அக்கா குசினிக்க சமைக்கிறா .... என்று இழுத்தவளாக ,மவன் ஒரு விசயம் சொல்ல வேணும்....என்று சொல்லி மௌனமானாள்.என்ன அம்மா விசயம் சொல்லங்கோவன் என்று ஆவாலாக தாமோதரன் கேட்க ,ஒன்றுமில்ல உங்கக்காக்கு நல்ல வரன் ஒன்று வருது அதான் ..... நல்ல விசயம்தானே முடிச்சுப் போடுங்க என்றவனிடம்,இல்ல மாப்பிள்ள வீட்டார் கொஞ்ம் சீதனம் எதிர்பார்க்கிறாங்க போல அதான்......!என்று இழுத்தவளிடம் பரவாயில்ல செய்வோம் அம்மா
என்ன பாடுபட்டாவது அக்காட விசயம் முடிந்தா சரி.
இவ்வளவு காலமும் உழைத்த பணத்தைக் கொண்டு அக்காவுக்கு வீடு ஒன்று அமைத்திருந்தான். கொஞ்ச நெஞ்சப் பணத்தை வங்கியில் சேமித்திருந்தான்.அதையே அக்காவுக்கு சீதனமாகக் கொடுக்க தீரமானித்தான். உறவுகளைவிட பணம் பெரிதில்லை என்பதையும்.சொந்த நாட்டைவிட வேற்று நாடு நரகம் என்பதையும் உணர்ந்தவனாக உறவுகளையும் தன் செந்த நாட்டையும் காண்பதற்காக ஏங்கியவனாக அக்காவின் திருமண நாளை எதிர்பார்த்திருந்தான் தாமோதரன்!