--- த்ரிஷா இல்லைனா திவ்யா ---
காதலை காதலிக்க
காதலர்களுக்கு நேரமில்லை!
காதலில் தோற்றவனுக்கு
மரணம் வெகு தூரமில்லை!
மோதலில் தொடங்கியதை
காதலென்று நினைத்தோமே!
சாதலில் முடிந்ததினால்
சந்தோஷம் தொலைத்தோமே!
நாணமுள்ள பெண் கிடைத்தால்
நழுவவிடாதே!
மானம் தான் முக்கியம்-அதை
மறந்துவிடாதே.
எழுதியவர் : அகத்தியா(ராஜ்கமல்)