அழகு பேரழகு
![](https://eluthu.com/images/loading.gif)
புலப்படாத பார்வையால் ஏறிட்டு பார்த்து யார் என வினவி,
காரணம் அறிந்து நன்றாக வாழ வாழ்த்தும்
முதுமை அழகு..
யார் என தெரியாமல் எம்மை பார்த்து புன்புறுவல் புரிந்து,
எனக்கும் விளையாட்டு காட்டும்
மழலை பேரழகு..
புரியாத மொழி எனினும் வேலை வேண்டி
வியர்வைக்கு நடுவே பேசும் புதியவனின்
ஆங்கிலம் அழகு..
மீனின் வருகைக்காய் நீண்ட நேரம் தலை நிமிர்ந்து நின்று,
மீன் கவ்வும் கொக்கின் ஒற்றைக்கால்
தவம் பேரழகு..
யாம் பார்க்கிறோம் என்றறிந்து போலியாய் பவுசு காட்ட முயன்று,
தோற்றுப் போகும் அறியா பெண்ணின்
வெட்கம் அழகு..
காதலிக்கும் பெண்ணின் குறும் புன்னகை
என்றுமே காதலனுக்கு பேரழகு..