அம்மா

தெய்வங்களில் முதல்தெய்வம்
அம்மா அல்லவா
தேவதை அவளுக்கு
தரணியிது ஈடாகுமா
ஐயிரண்டு மாதங்கள்
அங்கத்தில் தாங்கினாள்
அகம்விட்டு நான்வரும்வரை
அவளெங்கு தூங்கினாள்
அகிலத்தில் நான் தொட்ட
முதல் பெண்மணி
அன்பு பாசம் கருணை சொன்ன
நல்ல பெண்மணி
ஆசைமனைவி வந்தாலும்
அம்மாவை மறக்கமாட்டேன்
அனாதை ஆசிரமத்தில்
கொண்டு சேர்க்கமாட்டேன்
மறுபிறப்பு ஒன்றில் மறுபடியும்
நாம் பிறக்கவேண்டும்
மகளாக நீயும் தாயாக நானும்வந்து
வலிதாங்க வேண்டும் .

எழுதியவர் : சுசீந்திரன். (13-Jun-14, 1:38 pm)
Tanglish : amma
பார்வை : 70

மேலே