கன்றின் பசி தீர்க்க

துள்ளி திரிய வேண்டிய
கன்றொன்று கட்டுப்பட்டு
கதறியது....!

தாய்ப்பசுவிடம் செல்ல,
அது ஏங்கி தவித்தது

பசித்த வயிறு தாய்ப்பாலுக்கு
வேண்டியது

கட்டை அவிழ்த்துகொள்ள
முரண்டது, முடியவில்லை
ஐயோ பாவம் இளம் கன்று....!

ம்மா....! என்றழைத்தது

கன்றின் குரல் கேட்ட
தாய்ப்பசு உடல் சிலிர்த்தது

அதன் மடி சுரந்தது...!

மனம் கலங்கியது, மடி நிறைய
பால் இருந்தும், தன் கன்றுக்கு
கொடுக்க இயலாமல்
என்ன கொடுமையடா இது.....!

மனிதனின் சுயநலத்திற்கு
மடிபாலும் முழுதாக தேவைப்பட்டது

தாய்பாலை கன்றுக்கு மறுத்தது
அவன் சுயநலமே....!

உன் குழந்தை பசியால் அழுதால்
ஓடி வந்து பசி தீர்க்கும், மனிதகுலமே

ஏன் கன்றின் பசி தீர்க்க உனக்கு
மனமில்லை?

அத்தனை மனித குழந்தைக்கும்
பால் தந்து பசி தீர்க்கும் பசுவிற்கு
தன் கன்றின் பசி தீர்க்க இயலவில்லை....!

விதி செய்யும் சதியோ இது? விடை
சொல்ல வேண்டும் மனிதர்களே...!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (13-Jun-14, 2:34 pm)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 62

மேலே