எத்தனை இரவுகள்

எத்தனை இரவுகள்....!

எல்லாமே உனக்கு
வரவுகள்....!

இதில் செலவுகள்?
உந்தன் உடல் நலிவுகள்...!

வரவுகளினால் உடல்
நலிவுகளை சீர் செய்ய
இயலுமோ?

நலிவுகள், நலிவுகள் தான்
செலவுகள், செலவுகள் தான்....!

எந்த வரவும், உந்தன் உடல்
நலிவுக்கு விடை
தருவதில்லையே....!

இன்றேனும் இதை அறிந்திடு ...!
இனியேனும் உன்னை காத்திடு....!

இரவுகள், இன்ப நித்திரைக்கு
இறைவன் தந்த வரமே....!

இதயங்கள் கொஞ்சம் நிம்மதி
காண்பது அந்த நேரமே....!

அந்த இரவுகளை நீ ஒருவனின்
இச்சைக்கு பலி தருவது
எத்தனை சோகமோ?

'அட சீ அவளா' என்ற அவப்பெயர்
உனக்கெதற்கு?

'அடடா அவளா....! என்ற நற்பெயர்
பெற வழி இருக்கு,

அன்பின் வழியில் நீ நடப்பதற்கு
வரவு, செலவு என்ற கணக்கெதற்கு?

அன்னையின் மடியினில் நீ சேர்வதற்கு
பாவங்கள் ஏதும் இல்லை கணக்கு....!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (13-Jun-14, 2:52 pm)
சேர்த்தது : nimminimmi
Tanglish : ethtnai iravugal
பார்வை : 82

மேலே