வீசும் காற்றுக்கு வாசம் தருபவள் நீ
காற்றுக்கு, வீசும் காற்றுக்கு
வாசம் தருபவள் நீ......!
பாட்டுக்கு, என் பாட்டுக்கு
இனிய ராகம் சேர்ப்பவள் நீ
கவிதைக்கு, எந்தன் கவிதைக்கு
கருத்தாய் நிலைப்பவள் நீ
கருணைக்கு, எந்தன் கருணைக்கு
துணையாய் இருப்பவள் நீ
பார்வைக்கு, என் பார்வைக்கு
அழகிய காட்சியாய் திகழ்பவள் நீ
மூச்சுக்கு, என் மூச்சுக்கு
சுவாசம் தருபவள் நீ
அழகுக்கு, பெரும் அழகை
சேர்ப்பவள் நீ
என் உயிரினில், உயிராய்
கலந்து, கரைந்து இருப்பவள் நீ
எந்தன் வாழ்க்கையிலே
அரிச்சுவடியும் நீயே
அகராதியும் நீயே
அர்த்தங்களும் நீயே, அனர்த்தங்கள்
தடுப்பவளும் நீயே
உந்தன் அன்புக்கு, உயர் பண்புக்கு
அடிமையாகி வாழ்கிறேன் நான்