அழகிய கிராமம்
சிந்திக்க நேரமேது....
சிலம்பு சத்தமும்
சிறுசுகள் வட்டமும்
சிதறுண்ட நம் நினைவுகளை
சிந்தைக்கு கொண்டு வருகிறதே...
கவின்மிகு அழகை கூறிடும்
கண்மாய்க் கரையும்
கண்களால் பேசிடும்
கன்னியர் கூட்டமும்
குளக்கரை மீன்களும்
கொப்புளிக்குமே
கிராமத்து வாசத்தை..