மறு வாழ்வு விளை நிலம்

நீட்டி படுக்​கையிலே
நினைவிழந்து தூங்கையிலே
நின்றுவிட்டால் என் செய்வாய்!
உன் மூச்சு!!

நாளை எழுந்திருப்பேன்
நல்ல பல செய்திடுவேன் என்றிருக்க
நிரந்தரமாய் தூங்கிவிட்டால்
என் செய்வாய்?

எதிர் காலம் என் காலம்
என்றிருந்தாய் பல காலம்
எழுந்திருக்க முடியாட்டால்
உன்னிலை என்னாகும்?

தூக்கமது நினைவுருத்தும்
துவண்டிடும் உடல் முழுதும்
துணை வருவார் பலர் இருந்தும்
உடன் வாரார் அறிவாயோ?

உன் தூக்கம் உனை நிருத்தும்
ஒத்துழையா உனதுயிரும்
ஓ என்று பலர் அழவே!
நாளொன்றை நினைத்தாயா?

சேர்த்து வைத்த பணமனைத்தும்
சேர்ந்திருந்த உறவனைத்தும்
விடை கொடுத்து அனுப்பி விடும்
சிந்தனை செய்தாயா?

பணத்துக்காய் சண்டையிட்டாய் !
உறவுக்காய் அயல் வெறுத்தாய் !
அவர் மனதில் பகை விதைத்தாய் !
அருவடை எங்கு செய்வாய்?

இவ்வாழ்க்கை சிறந்திட்டால்
மறு வாழ்வும் சிறந்துவிடும்
சிறந்து வாழ்ந்து இறந்திட்டல்
சிறப்புருவாய் ஈருலகும்!!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (15-Jun-14, 7:59 am)
பார்வை : 1247

மேலே