பகத்சிங்

நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பகத்சிங் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கிலிடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தது ஆங்கிலேய அரசு.
தாம் இறப்பது பற்றி பகத்சிங் வருந்தவில்லை. ஆனால், தன்னை ஒரு குற்றவாளியாக நினைத்துத் தூக்கில் போடுவதை அவர் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னை ஒரு எதிரியாகக் கருதிச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.
""நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்... உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'' என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள்.
அதற்கு பகத்சிங், ""தூக்கிலிடும்போது, என் கால்கள் என்னுடைய தாய்மண்ணைத் தொடமுடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் சுடும்போது என்னுடைய தாய்மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை!'' என்று கூறினாராம்.

எழுதியவர் : படித்தது (16-Jun-14, 6:10 pm)
பார்வை : 228

மேலே