வருமா
எழுத ஆரம்பிக்கும்
ஒவ்வொரு கவியும்
அவளை மறக்கத்தான்..
ஆனாலும் தமிழோ
திருப்புகிறது அவள்பக்கம் -இது
மாறவேண்டுமெனில்
எனக்கு தமிழ் வர வேண்டும்
இல்லையேல் அவளுக்கு
காதல் வரவேண்டும்....
ஆனால் ஒன்று அவளுக்கு
காதல் வந்தால் போதும்
கவியில் தேர்ச்சி அடைந்திடுவேன்...