பொய் கல்யாணம்
வயால் நாயணம்
ஓட்டை பானையில் மேளம்
எருக்கு மாலை
தென்னைக்கீற்று தாலி
வெட்கத்தோடு நீ
மீசைமுளைக்காமல் நான்
பொய்யாய் ஒரு திருமணம்
கூட்டஞ்சோறு திண்று
கூட்டம் கலையும்
எங்கொல்லையில்
வச்சமரம் பூத்தநாளன்று
நீ வயது வந்த சேதியை
மாந்தோப்பு கிளி சொல்லிற்று
என்னிடம்
எனக்கு ஆ(மீ)சை வந்ததே
கருங்குயில் கூவலையோ
உன்னிடம்
மாம்பழத்து வண்டாட்டம்
உள்ளிருந்து குடையுதடி
உன் சொல்லாத காதல்
கல்யாண மாலை
கண்ணில் தெரியுதடி
கனவில் சேர்ந்த நாம்
நிஜத்தில் சேராமோ...
என் சுவாசமே
உன் வசம் தானே
வம்சம் வளர்க்க வருவாயோ
திவசம் செய்ய விடுவாயோ...