தத்தங் குடிமைக்குத் தக்க செயல் - ஆசாரக் கோவை 49
உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்குங் கல்விக்கும் ஆண்மைக்குந் தத்தங்
குடிமைக்குத் தக்க செயல். 49 ஆசாரக் கோவை
பொருளுரை:
ஒவ்வொருவர்க்கும்
உடை உடுத்துவது, பிறரிடம் நடந்து கொள்ளும் முறை,
சொல்லில் தவறு ஏற்படுவது, பிறரைத் திட்டுவது
ஆகிய இந்த நான்கு செயல்களும் அவரவர்கள்
வகிக்கும் பதவிக்கும், கல்விக்கும், ஆற்றலுக்கும், குடிப்பிறப்புக்கும் ஏற்ப அமையும் செயல்களாகும்.
‘சொற் செலவு' என்றும் பாடம்.