எது அழகு

எது அழகு ?
நான் பேசும்போது,
நீயம் பேசும் மௌனங்களா?

இல்லை
நான் பார்க்கும் போது
நீ பார்க்காத உன் பார்வைகளா?

ஆறு மாத குழந்தையிடம், பேச சொல்லி அடம்பிடிக்கும் அம்மாவாக
நான் உன்னிடம் கூறிய காதலா?

செவிகள் சந்தித்தும்
விழிகள் கேட்காத
தொலைபேசி உரையாடலா?

ஆயிரம் பெண்கள் கடந்து சென்றாலும்
உந்தன் பெயரை மட்டுமே
ஜெபிக்கும் எந்தன் நினைவுகளா?

இதில் எது அழகு என்று-நான்
கண்டுபிடிப்பதற்குள்
இத்தனையும் களைந்து விட்ட என் உறக்கமா?

மீண்டும் என் கனவுகளில்
உன்னை தேடும்
எந்தன் முயற்சியே எனக்கு அழகு.....

கனவுகளுடன்
பரமகுரு க

எழுதியவர் : பரமகுரு க (18-Jun-14, 4:31 pm)
Tanglish : ethu alagu
பார்வை : 122

மேலே