மரண படுக்கையிலும் மறக்காத உன் நினைவு 555

என்னவளே....
உன் மீது காதல் கொண்ட
என் நெஞ்சிக்குள்ளே...
வார்த்தை என்னும் முட்களை
கொட்டி சென்றவளே...
நீ கல்லெறிந்து
ரசிக்கும் குளமென்று...
என்னில் காதல் என்னும்
கல் எரிந்து ரசித்தவளே...
மேனியெங்கும் ஓடும்
நரம்புகள் போல...
என் மேனியெங்கும்
கலந்திருபவளே...
என் இதயத்தின் மொத்த
அறைகளையும்...
சொந்தம்
கொண்டவளே...
தினம் என்
கண்ணுக்குள் மிதந்து...
சந்தோஷ கண்ணீரை
வர வைத்தவளே...
நீ முத்தம் பதித்து
எச்சிலாக்கிய கன்னத்தில்...
இன்று உப்பு நீர்
கலக்குதடி...
காகிதமாய் நீ கசக்கி
எறிந்துவிட்டாய்...
என் மனதை...
கண்ணீர் வடிக்கும்
என் கண்களில்...
என்றும் கரையாதடி
உன் பிம்பம்...
என் மரண படுக்கையிலும்
மறக்காதடி...
உன்னையும் உன்
நினைவுகளையும்...
காதல் கொண்ட
என் மனது.....