எழுதுகோலின் வேண்டுகோள்
பல்லாயிரம் எழுத்துக்களுக்கு மேல்
எழுதி முடித்த எழுதுகோல்
தன் மேனியின் தேய்வை பற்றி
யோசனை கொண்டது அன்று
எழுத முடிந்த வரை எழுதிடுவான்
இந்த எழுத்தாளன்
பின் தூக்கி எறிந்திடுவான் என்னை,
வேறொன்றை நாடிடுவான், மேலும் எழுத
அவனுக்கு, அவன் எழுத்துக்கள்
பழுதில்லாமல் இருந்திட வேண்டும்
எனக்கோ என் வாழ்க்கையின் முடிவிலாவது
கொஞ்சம் சிறந்திட வேண்டும்
எழுத்தாளர்களே, உங்கள் எழுத்துக்களை
பாதுகாப்பது போலவே
எழுத உதவிய எழுதுகோலையும் ஓரிடத்தில்
அழகாக அலங்கரித்து வையுங்களேன்
அதன் மேலே, எழுதுங்களேன் ஒரு குறிப்பு, எந்த எழுத்துக்கள் எழுதி நீங்கள் சிறப்படைந்தீர்கள் என்ற கதையை
இது எழுதுகோலின், வேண்டுகோள் அனைத்து
எழுத்தாளர்களுக்கும்