என்னை வெல்ல முயலாதே சகியே

எனை வெல்ல நீ முயலாதே
சகியே

நானே தந்திடுவேனே உன்னிடம்
முழுமையாக என்னையே

உன் உயிரில் கலந்து உறைந்திட
காத்திருக்கின்றேன்

உடல் என்னிடம் தவிக்க, உயிர்
உன்னிடம் கொடுத்திருக்க

வார்த்தைகள் எல்லாமே உந்தன்
பெயராய் வெளியில் வர

வாசனைகள் எல்லாம் உந்தன்
நினைவை என்னில் தர

வரும் யோசனைகள் எல்லாமே
உனதாய் இருந்திட

நான் உன்னிடம் என்னை எப்பொழுதோ
தந்து விட்டேனே

நீ என்னை வென்று முடித்து
வெகு நாட்கள் ஆனது பெண்ணே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (19-Jun-14, 1:41 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 54

மேலே