உதவி இன்று வேண்டாம்
உள்ளத்தில் நினைத்து
ஓவியமாய் படைத்து
உயிரையும் கொடுத்த
என் காதலின் கதை கேட்க
சிவனது நந்தியே........
நீயாவது செவி மடுப்பாயா?
உயிருக்கையில் உழைத்து
உருகுலைகையில் நொ(கா)ய்ந்து
உறைவிடம் இழந்த
மரகிளையின் இலைச்சருகே....
நீயாவது என் காதலுக்கு தூது செல்வாயா?
பூம்புகார் தன்னில் வாசம் செய்ய
போன இடமெல்லாம் புகழ்வீச
மெய்க்கும் இணங்கி பொய்க்கும் இசையும்
தலையாட்டி பொம்மையே.....
நீயாவது என் காதலுக்கு சம்மதம் தருவாயா?
பச்சரிசியின் நிறம் தாங்கி
பாலமுதின் குணம் ஏந்தி
பரமசிவன் உடன் பொருந்திய
வலம்புரி சங்கே..... நீயாவது என்
சங்கடம் நீங்கிட சத்தம் முழங்கிடுவா ?
காதில் ஏதோ சொல்ல வந்தாலும்
காலை மட்டுமே தொட்டு செல்லும்
கரை தவறிய கடல் அலையே .....
நீயாவது என் காதலன் கரம் சேர்க்க
என் விரல் பிடித்து அழைத்து செல்வாயா ?
ம்ம்ம்ம்.... சரி..... சரி.....
நீங்கள் அனைவரும்
இப்போது பொருதிடுங்கள்......
சற்று ஓய்வெடுங்கள்.......
ஒரு நாள் இல்லை , ஒரு நாள்
நான் வணங்கும் சிவபெருமான்
நான் சுவாசிக்க ஒரு காதலை
நான் நேசிக்க ஒரு காதலனை
நான் கைபிடிக்கும் அந்த கணவனை
கண்டுபிடித்து தருவான் - நான்
கரம் சேர்க்க கண்ணிசைப்பன்
அப்போது வந்திடுங்கள் - நான்
வாழ உதவிடுங்கள்......
கண்ணீர் சிந்தி தலை வணங்குவேன்
கடைசி வரை நினைந்திருப்பேன்- உங்களை
கடைசி வரை நினைந்திருப்பேன்