சீனிபுளியங்காய் அ கொடுக்காபுளி

கொக்கி போட்டு பறித்து
உனக்கு பெரியது
எனக்கு பெரியதென்று
சண்டைபோட்டு

மேலே நிறைய இருக்கு
பறிக்க முடியலைன்னு
ஏக்கப்பட்டு

வீட்டிற்கு வந்து உதை வாங்கியென
நன்றாய் போனது நம் இளமைக்காலம்

இப்போதோ நாம் இருக்கிறோம்
ஆனால் மரத்தை காணவில்லை !!

வழியில் உன்னை பார்த்ததும்
சாப்பிட வேண்டுமென்ற ஆசை

எவ்வளவு என்றேன்
"கால் கிலோ நாற்பது" என்றாள்
ஆப்பிளையும் மிஞ்சிவிட்டது

வீட்டிற்கு வந்ததும்
விதைகளை விதைத்து வைத்தேன்

என் சந்ததியினர் சாப்பிடுவதற்கு !!!

எழுதியவர் : ஜெயந்தி ஆ (19-Jun-14, 1:53 pm)
பார்வை : 213

மேலே