இந்திய கருப்பு பணம் - நாகூர் லெத்தீப்

பதுக்கிய
பணக்குவியல்
பண முதலைகள்
முதலீடு.......!

உறுஞ்சிய
ஏழை இரத்தம்
வெளிநாட்டிலே
பதுங்கியது........!

பண வீக்கம்
வறுமை கோட்டிற்கு
தொடக்கம்.........!

விலை உயர்வு
இந்தியாவின்
வருமானத்திற்க்கே சரிவு.........!

இந்திய பட்சத்
தாக்கல்
ஏழை மக்களுக்கு
விக்கல்........!

பதுக்கிய பணம்
கணக்கெடுப்பு
குழுவின்
ஆய்வுக்கோ ஆப்பு........!

சொல்வதெல்லாம்
உண்மை பதுக்கிய
பணமெல்லாம்
வெண்மை........!

இந்திய
நிதித்துறை
வெளிநாட்டிலே
பெற்ற கடனோ
பெருந்தொகை...........!

சுவிஸ் பேங்க்
இந்திய பணத்தை
பதுக்கும் கேங்........!

தணிக்கை
அறிக்கை அரசியல்
கண்துடைப்பு........!

விசாரணை
விசயமில்லாத
கருப்பு பணம் சோதனை........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (19-Jun-14, 10:44 am)
பார்வை : 184

மேலே