தனிமை
உளக்கல் சிற்பமாக
தேவை இந்த உளி..!
இதழ் மொழி இறந்து
இதய மொழி உயிர்க்கும் இளவேனிற் காலம்…!
“நான்” ஐத் தோலுரிக்கும்
நல்லதொரு ரசக்கலவை…!
மொத்தத்தில் கவியுலகம்,
தவமெனவே இதனைக் கூறும்!
******************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்