பெண் மக்கள், பொன் மக்களே

பெண் மக்கள் நாம் அனைவரும்
இன்றைய நாளினில் பொன்
மக்களே
பெண் மக்கள் பிறந்தால்
சலிக்கும் நாட்கள் போனது
பெண் மக்கள் வேண்டும்
என கேட்கும் நாட்கள் வந்தது
பெண்ணான எனக்கு இது
மகிழ்ச்சி தருகின்றது
பொன்னான பெண் மக்களே
பெண்ணாக பிறந்ததற்கு
பெருமை கொள்ளுங்கள் இனி
கண்ணாக போற்றட்டும் நாடு
இனி நம்மை
நாம் சிறப்பது ஒரு மகளாக
பெற்றோருக்கு சிரிப்பை தந்து
ஒரு சகோதரியாக சில ஆண்
மக்களின் அறிவை திறந்து
ஒரு மனைவியாக வீட்டில்
விளக்கேற்றி நம் இல்லம் செழிக்க
ஒரு தாயாக பல மக்களுக்கு
அவருக்கு அமுதும், அறிவும்
சேர்ந்து ஊட்டி வளர்த்து
ஒரு தலைவியாக அலுவலகத்தில்
பல வேலையாட்களை நிர்வகித்து
எங்கும் பெண்கள் இன்று பணி
புரிகிறார்கள், எதிலும் பங்கு
கொள்கிறார்கள்
பெண்களே பெருமை கொள்ளுங்கள்
சிறுமையிலிருந்து நாம் தப்பி
விட்டோம், சிறந்து விட்டோம்