காதலுக்கு மரியாதை

கண்களால் கைது செய்த
அழகிய தீயே ! மின்னலே!
உன்னை கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்!
உன்னை கண்ட நாள் முதலாய் ...
மனம் அலைபாயுதே!
உன் கண்ணில் தெரியும்
கதைகளை நினைத்தாலே இனிக்கும்!
கண்ணும் கண்ணும் கலக்கும் போது ...
மௌனம் பேசியதே!
நாம் எழுதிய கடலோர கவிதைகள்...
மௌனராகமாய் ஒலிக்கும்!
நாம் பழகிய அந்த ஏழு நாட்கள்...
சம்திங்!சம்திங்!
தென்றலே எனை தொடு..
மின்சாரக் கண்ணா !புன்னகை மன்னன்!
திருடா!திருடா! என நீ அழைத்த போது ,
அந்த ஒரு நிமிடம் ,,,
சித்திரம் பேசுதடி என வியந்தேன்!
என் இதயக்கோவிலில் நீ
எழுப்பிய காதல் கோட்டையின் ...
கோபுரங்கள் சாய்வதில்லை !
இதயக் கமலத்தில் இதயக்கனியாய் ...
இருக்கும் அன்னக்கிளியே !
நம் காதலுக்கு வானமே எல்லை!

எழுதியவர் : meenatholkappian (21-Jun-14, 8:55 pm)
பார்வை : 65

மேலே