தாயினும் சிறந்த கோயிலும் இல்லை

உற்றவரிலும் உற்றவர் பெற்றவர்.

பெற்றவரிலும் உற்றவர் தாய் என்பவர்.

தாயின் ஸ்தானத்தை யாரும் கொள்ள முடியாதே, ஒருவரின் வாழ்வினிலே.

ஒரு தாயால் தன் மக்களுக்கு தந்தையாகவும், தாயாகவும் சிறக்க முடியும், ஆனால்
ஒரு தந்தையால் கூட தாயின் ஸ்தானத்தை நிரப்பிட முடியாது.

ஏனெனில் அன்னை என்பவள் தன் மக்களுக்கு அனைத்தும் ஆகுபவள்,

அவள் தன்னை மறந்து விடுவாள், மக்களை பெற்றதும், தன்னிலை என்பது அவளுக்கு இந்த மண்ணிலே அவள் மக்களின் நிலை தான்.

வளர்ந்தாலும் ஊட்டிடுவாள், அவசரத்தில் உண்ணாமல் செல்லும் தன் மக்களுக்கே.
தயங்காமல் காலணிகள் அணிவித்திடுவாள், பள்ளிக்கு புறப்படும் தன் பிள்ளைகளுக்கு.
வீதி வரை வந்து வழி அனுப்பி, மறக்காமல் வேண்டிடுவாள் அவர்கள் நலமாக வீடு திரும்ப வேண்டுமென்று.

உறங்காமல் கண் விழிப்பாள், தன் மக்கள் உடல் நலம் குறைந்தால்,
ஒரு நாளும் சலிப்பதில்லை, தன் மக்களுக்கு சேவை செய்திட.

ஒரு போதும் சபிப்பதில்லை தன் மக்களை, அவர் என்ன தான் தொல்லை தந்தாலுமே.
ஒரு நொடியும் மறப்பதில்லை தன் மக்களை, அவர்கள் எத்தனை தொலைவு தான் இருந்தாலுமே.

தாய்க்கு நிகர், இன்னொரு தாயே, தாய்க்கு நிகராக வேறொருவர் ஆக முடியாதே

அனைத்து தாய்களுக்கும் என் எழுத்துக்கள் சமர்ப்பணம், நானும் ஒரு தாய் என்ற பெருமையுடன்
என் எழுத்தினை முடிக்கின்றேன்.

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (22-Jun-14, 2:52 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 1044

சிறந்த கட்டுரைகள்

மேலே