இதான் கடைசி முத்திரையாகும்
பழகுதலில்
பகுத்தலும்,
வகுத்தலும்,
மிகைத்தலுமே
இங்கு,
விழித்தல் இல்லா
இதை தாண்டி நான்
உனை அழைத்துப்போக
முடியாது விட்டுவிடு,
இல்லை எனில்,
காதலோ?./
காமமோ ?
என்ற முத்திரையை
சுமக்க வேண்டியிருக்கும்,
நட்போடு வெட்டிக்கொள்கிறேன்,
வயதானதும் வா
பழகியதில் வாழலாம்?