மீனவனின் வேதனை
Fishermen :
அலை கடலிலே வாழ்வது மீனடா...
அனைத்து மீனவனின் உயிரே இந்த கடற்கரையடா..!
வலை விரித்து மீன் பிடிக்கிறார்கள் பாருடா...
வங்கக் கடலே இவர்களின் வாழ்க்கையடா..!
கடலில் கப்பல் மிதக்கிறது... கடலில் சென்ற தன்
கணவன் திரும்பி வருவானா என்று அவள் மனம் ஏங்குகிறது..!
மீனவனுக்கு தெரிந்த தொழிலே மீன் பிடிப்பு...
மீனவனை சுட்டு கொல்வதே எதிர் நாட்டின் நினைப்பு..!