நாய்க்கடி

ஒரு நாய்
என்னைக் கடித்துவிட்டது

நான்,
' பைரவா '
என்றலறினேன்

பைரவர்
நாய்களின் கடவுள்

இரண்டாமாட்டம் முடித்து
இரவுக்கனாக்களோடு
இனிதே வந்துகொண்டிருந்தவனுக்கு
இப்படியொரு நிலையா

மேலும்
மதிப்பிற்குரிய அந்நாய்
சும்மாதான்
படுத்துக் கிடந்தது
என் கால்கள்
அதன் கால்களை
நலம் விசாரிக்கும்வரை

மிதிபட்ட
அதிர்ச்சியில்
அது என்னசெய்யும்
பாவம் !
' பொக் ' எனக் கடித்துவிட்டது

நான்
அகால மருத்துவமனை தேடி
அவசரமாய் விரைந்தேன்

எதிரே
ஒருவன் வந்துகொண்டிருந்தான்

பார்த்தால்
பக்கத்து அறைக்காரன்

நடுத்தெருவில்
நாங்கள்
நலம்விசாரித்தோம்

இந்நேரத்தில்
இங்கே ? - என்றான்.

நான்
விரலில்
வெற்றிக்குறியமைத்து
காற்றில் புகைவிட்டுக் காட்டினேன்

புரிந்துகொண்டவன்
புன்னகையோடு
விடைபெற்றான்
ஆசுவாசப் பெருமூச்சோடு
நான்
நடைபெற்றேன்

இவ்விடத்தில்
நீங்கள் சற்று
அதிர்ச்சியாகிறீர்கள்
தெரிகிறது
அந்த அதிர்ச்சியை
அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்

தொடர்ந்து நடந்த
நான்
எதிரே அந்த
எவனோ ஒரு வழிப்போக்கனிடம்,
" நாய்க்கடிக்கு
இந்நேரத்தில் எங்கே
வைத்தியம் பார்ப்பார்கள் "
- என்று விசாரித்தேன்

ஓம் பைரவாய நமஹ

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (23-Jun-14, 2:29 pm)
பார்வை : 67

மேலே