காய்கறிக் காரரின் காதலி

தக்காளி நிறத்துக்காரி ,
காரட் உடம்புக்காரி .

கீரைக்கட்டு கொண்டக்காரி,
புடலங்காய் கூந்தக்காரி .

கொத்தமல்லி வாசக்காரி ,.
பச்சைமிளகாய் கோபக்காரி

சக்கரைப் பரங்கி பாசக்காரி
வாழைத்தண்டு நேசக்காரி

பச்சரிசி பல்லுக்காரி ,
சவ்வரிசி சொல்லுக்காரி .

பசப்பிப் பேசுவதில் அவள் கைகாரி ,
ஒப்பனையில் அவள் ஒய்யாரி .

ஆப்பிள் அவள் கன்னங்கள் ,
மாதுளை அவள் செவ் விதழ்கள் ,
பன்னீர் திராட்சை அவள் விழிகள் ,
வெண்டிக்காய் அவள் விரல்கள் ,
முருங்கக்காய் அவள் கால்கள்.


அவளை அருகிருந்து பார்க்கவேண்டும் ,
தொட்டு தொட்டுப் பேசவேண்டும் ,
அறுசுவை உணவை,
உண்டபின் வரும், மயக்கம் கூட வரும்.

(காய்கறிக் காரர் தன் காதலியைப் பற்றிய விமர்சனம் )

எழுதியவர் : arsm1952 (23-Jun-14, 2:30 pm)
பார்வை : 266

மேலே