கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கோடிக்கு மேல் உள்ளது நன்மைகள்
ஒரு கூட்டமாய் யாரும் வாழ்வதில்
குடும்பம் ஒரு பல்கலைகழகம் ஆவது,
அதில் பல்வேறுபட்ட மனிதர்
இருப்பதினாலே
குழந்தைகளும், குமரர்களும், குமரிகளும்
நடு வயதினரும், முதியவரும் சேர்ந்திருப்பதில்
தான் எத்தனை மகிமை
முதியவரின் அனுபவங்கள் சொல்லிடும்
பல உண்மை இளையவர்க்கு, அவர் வாழ்வில்
ஏற்படுத்திட செழுமை
நடு வயதினரும் கொஞ்சம் பெற்றிடுவார்
அறிவுரை வீட்டின் முதியவரிடம்,
பகிர்ந்திடுவார், பக்குவமாய்
மக்களிடம், அவரவரின் தேவைக்கு ஏற்றபடி
அதனை
குழந்தைகளின் கும்மாளமோ, வீட்டினை
கல, கலக்க வைத்திடும் அனுதினமும்
பெண்கள் விளங்கிடுவார் இல்லத்தின்
கண்களாய்
நாள் முழுக்க வேலை செய்து வரும்
வீடு திரும்பும் ஆண்களுக்கு செய்திடுவார் பல
சேவைகள்
பண்டிகைகள் கோலாகலங்கள் தான் அங்கே
பவித்திரங்கள் அனைத்திலும் தான் விளங்கும்
அந்த வீட்டிலே
கூடி வாழ்ந்திடும் குடும்பம், கோடி நன்மை
கண்டிடும்