போற்றி, போற்றி மாதரசே

போற்றி, போற்றி மாதரசே
போற்றிட தான் வேண்டும் நானும் உன்னை

போருக்கு சென்ற கணவன் வீடு திரும்பல,
போர்க்களத்தில் மறித்து விட்டான் என்ற சேதி
காதில் வந்து இன்னும் விழவில்ல

மெய் அன்பே, உன் உயிர் அதை அறிந்து கொண்டது
யாரும் வந்து சொல்லும் முன்பே

தாங்கி கொள்ள முடியாத பேரிடி தான்
நெஞ்சத்திலே வந்து இடித்தடி, உள்ளம் கொதித்தடி

உன் மணவாளன் செய்தது நாட்டிற்கு தியாகம்
அதனாலே நீ முடிவு செய்தாய், உந்தன் வாழ்க்கையை
செலவழித்திட ஊனமுற்ற மக்களின் சேவையிலே

சேர்ந்து விட்டாய் குருடர்கள் பள்ளியிலே
அவர்களுக்கு கொஞ்சம் அறிவும், நிறைந்த அன்பும்
கொடுக்க

மாதரசே, நீயல்லவோ சிறந்த பெண்மணி
மாய்ந்து, மாய்ந்து அழுது உயிரை மாய்த்து
கொண்டிருந்தாலும், பயன் தான் என்ன?

மட்டிலாத சேவையினால் நெஞ்சம் நெகிழ்ந்திடுவார்
கண் இழந்த பிள்ளைகள் அனைவரும்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-Jun-14, 1:55 pm)
பார்வை : 88

மேலே