பொய்யுரைத்தேன்

பொய்யுரைத்தேன் நான்
உன்னை விரும்பவில்லை என்றே

நம்பிவிட்டால் நீ அதனை
அழுதிடுவேன் மனம் உடைந்தே

பெண்மைக்கு எளிதில் ஒப்புக்கொள்ள
முடியாதே தன் காதலையே, காதலனிடம்

நாணம் கொஞ்சம் அதிகம், கூச்சம்
கொஞ்சம் காரணம்

மறுபடியும் கேட்டு நீ நின்றிருந்தால்
என் முன்னே, சொல்லிடுவேன் நான் உண்மை

உயிருக்கு நெருக்கமான உன் உறவு
காலமெல்லாம் வேண்டும் இது என் கனவு

கண் கொண்டு நீ வேறொருத்தியை பார்த்து
விட்டால், விட்டுடுவேன் என் உயிரை

கனிவோடு சொல்கின்றேன், என் நிலைமை
காத்திருக்கின்றேன், எதிர்ப்பார்த்திருக்கின்றேன்
அனுதினமும் உன் வரவை

கேட்டிடு நீ மறுபடியும், சொல்லிடுவேன் நான்
அதனை, கூச்சம் விட்டு, நாணம் தொலைத்து

நான் உன்னை விரும்புகிறேன் காதலனே...!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-Jun-14, 1:44 pm)
பார்வை : 66

மேலே