ஓசையின்றி

பேசத் தொடங்கும் முன்னரே
முடிந்து விடுகின்றன
உரையாடல்கள்
நம் விழிகளின் வழியே

வார்த்தைகளை விட
மௌனங்கள் அதிகம் சுமக்கின்றன
நம் காதலை

சொல்லாமல் சொல்லிவிடுகிறது
சிறு அமைதி
நம் எண்ணங்களை

சில நேரங்களில்
அடர்ந்த மௌனத்தில்
இழையோடுகின்றன
காதல் உணர்வுகள்

மெல்லச் சிரித்தால்
உதிர்ந்துவிடுமோ என்று
புன்னகையிலேயே தழைக்கிறது,
மௌனத்தில் மலர்ந்த நம் காதல் பூ !!

எழுதியவர் : கார்த்திகா AK (23-Jun-14, 1:34 pm)
Tanglish : oosaiyinri
பார்வை : 86

மேலே