தந்தை பெற்றவரா
கருவில் சுமந்தவளையும்
தோளில் சுமந்தவரையும்
பெற்றோர் என்று சொல்வதில்
உடன்பாடில்லை எனக்கு
அப்படி என்னதான் பெற்றார்கள்?
கஷ்டமும் துன்பமும் கவலையும்
இஷ்டப்பட்டு பெற்றதால்தான்
பெற்றோர் என்று ஆனார்களோ?
தினம் ஒன்றில் நினைத்துப் போக
தனம் மட்டும் தரவில்லை
தினம் தினம் நினைத்திருக்க
குணம் தந்தவர் தந்தை
தந்ததால் தான் நீங்கள் தந்தை
பெற்றவர்கள் நாம் பெற்றோர்
வாயிற்றுக்குள் சுமந்தவளும்
வயிற்றுக்காக சுமப்பவரும்
சுமந்தோராகவே இருக்கட்டும்.