என் தந்தை

நான் கருவாகி
உருவாகி
திருவான பின்னும்

வழி தவறாது நானிருக்க
கடிவாளம் ஆனாய் !

நான் முடியாது என்றாலும்
படியாமல் சென்றாலும்

இருள் சூழாமல் என் வாழ்வின்
விடிவெள்ளி நீ ஆனாய் !

உன்னை உதைத்து புண்ணான
என் கால்களுக்கு மருந்திட்டாய்

நான்
தடுமாறி வீழ்ந்தாலும்
உன் தோள்களில் தாங்கினாய்

முதல் முத்தம் நீ தந்தாய்
முகம் சுளித்து
திரும்பினேன்
குத்திய உன் மீசை கூறியது
வாழ்க்கைப் பாடம் என்பதறியாது

கண்ணாடியில் இரசித்து நின்றேன்
அரும்பிய என் மீசையை
பின்னாடி
சிரித்து நின்றாய்
எனக்காய் மீசை இழந்த நீ !

நான் எதிர் வீடு சென்றாலும்
எனக்காக காத்திருப்பாய் உண்ணாமல் !

எனை எதிர்ப்போர்கள் யாவர்க்கும்
எதிரியாய் நீ இருப்பாய் !

தொழவி எனை சாய்க்கும்போது
தோழ் தந்து என் முதல் தோழனானாய் !

உயர் தலைவனாக நான் உயர
உறங்காமல் நீ உழைத்தாய் !

படைத்தவன்தான் இறைவனென்றால்
எனைப் படைத்த நீயன்றோ
என் தெய்வம் !

சோறூட்டி, சீராட்டி,
அன்பூட்டி, அறிவூட்டி,
பண்பூட்டி, பாராட்டி,
நான் நானாக
நீ எனக்கு வாழ்வு தந்தாய் !

அன்றும், இன்றும், என்றும்
எனை சுமக்கும்
தந்தாய்
நீ எனக்குத் தாயும் ஆனாய் !

எழுதியவர் : முகில் (23-Jun-14, 10:48 pm)
Tanglish : en thanthai
பார்வை : 585

மேலே