இலையின் விலை

இலையின் விலை ..
காலைப் பொழுதில் கதிரவன் ஒளியை
காணும் பொழுது தளதள வென்ற
பச்சை மேனிப் பனித்துளி விலக
உச்சி வேளையில் ஆடிப் பாடி
உணவை சமைத்துப் பகிர்ந்து கொடுப்பேன்
மாலைப் பொழுதில் கதிரவன் ஒளியை
காணும் பொழுது கலகல வென்று
ஆற்றின் கரையில் அமைதியில் நின்று
வீசும் காற்றில் ராகம் இசைப்பேன்
ஆடி வெள்ளம் ஆற்றில் கண்டு
காற்றில் ஆடிக் கருகிய சருகாய்
சுழலும் நீரில் மிதந்து செல்வேன்