என் செல்ல நாய் குட்டி

பள்ளிக்கூடம் போய்
பாதியில திரும்பி வந்தேன்
சாலையோரம் உன் சத்தம்
என்னை சங்கடத்தில் ஆழ்த்திருசே....

வெள்ளை நிற மேனியோட
முள்புதரில் நீ கிடந்த
என் காலடி சத்தம் கேட்டு
பின்னாலையே வந்துட்ட....

நாலு காலு
ஒரு வாலு
என் பின்னாலேயே வர
என்னால முன்னால போக முடியலையே....

கை நீட்டி
வா னு கூப்ட்டேன்
ஓடி வந்து என் கை ரெண்டையும் நக்கி வச்ச
அன்றிலிருந்து தொடங்கியது நம் சொந்தம்....

உன்னை தூக்கிட்டு வீட்டுக்கு போனேன்
அப்பா முறைச்சாங்க
அம்மா திட்டுனாங்க
அண்ணன் கண்டுகல
தங்கச்சி மட்டும் உன்னை தூக்கி கொஞ்சுனா
நினைவிருக்கா உனக்கு.?.?..

உன் கழுத்துல பெல்ட் கட்டி
நெத்தியில போட்டு வச்சு
டைகர் னு பெயர் வச்சேன்
கம்பீரமா நீ திருஞ்ச.....

பூனைகிட்ட அடிவாங்கி
கோழிகிட்ட கொத்து வாங்கி
சின்ன நாய்கிட்டலாம் கடி வாங்குனப்ப
உன் வீரம் நம் தெருவுக்கே தெருஞ்சுருசே....

பயந்தாங்கோலி நாயின்னு பெயர்
வாங்குனாலும்
நாடு ராத்திரியில் உன் சத்தம்
தெருவையே எழுபிருமே.....

ஊருக்குள்ள வெடி வெடுச்சா
தோட்டத்துக்கு போயிருவ
தோட்டத்துல வெடி வெடுச்சா
வீட்டுக்கு வந்துருவ.....

பழைய சோறு வச்ச
மோந்து கூட பாக்க மாட்ட
கரிகுலம்பு மீனுணா
வாய் சப்பி நின்னுக்கும் கால் கடுக்க காத்துக்கிடப்ப....

நம் வீட்டின்
வரவேற்பறையில்
உன் குரல்தான் முதலில்
வரவேற்கும் நம் விருந்தாடிகளை....

தங்கச்சிக்கு நீ உயிர்
உன்கூடதான் அவளின் அதிகபச்ச குறும்பு...

நீ வந்து பல
வருஷம் ஆகிடுச்சு
உன் விளையாட்டுத்தனம் மட்டும்
அறவே போகலையே....

படிப்பு முடுஞ்சு
நான் வெளியூர் வந்துட்டேன்
இங்கே எந்த நாய் குட்டி பாத்தாலும்
உன் ஞாபகம் வந்துருமே....

கடைசி மாசம் வந்தப்ப
என்னை பாத்து குளச்ச
என்னை அடையலாம் தெரியல உனக்கு
என் குரல் வச்சு கண்டு புடுச்சு
தாடி பட்டு கொச்சுனியே....

உனக்கு வயசு ஆகிடுச்சு
கண் இப்ப சரிய தெரியலன்னு
அப்பா சொன்னங்க....

இந்த மாசம் வந்தப்ப
வீட்ல உன்னை காணும்
தோட்டத்துல தேடி பாத்தேன் காணும்
தங்கச்சிகிட்ட கேட்டேன் நீ
செத்து போயிட்டத கண்ணீரோட சொன்னா....

நம்பமுடியல
விசில் அடுச்ச வந்துருவ
டைகர் டைகர்னு கூப்டாலும் வந்துருவ
இப்ப எப்படி கூப்ட்டாலும் உன்னை காணலையே....

நீயில்லா வீட்டில் உன் தட்டு
மட்டும் தனியே கிடக்கு
உனக்கு சோறு வைச்சு
கூப்டு பாத்தேன் நீ செத்தத மறந்து....

நான் வளத்த முதல் உயிர் நீ
நான் இழந்த முதல் உயிரும் நீ....

வாயிருந்த வர சொல்லிருப்ப
நீ சாகுறதுக்கு முன்னாடி என்னை பக்கனுமுனு.....

என் செல்லமே
நீ நாய் என்பதால்தானோ
நம் பாசம் புரியாம போச்சு
நீ செத்தது கூட எனக்கு தெரியாம போச்சு....

இன்னொரு ஜென்மம் இருந்த
நீ மனிதன பொறந்திரு
பேசிடாத நம் பாசத்தை
பேசி திர்த்து கொள்வோம்.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (11-Mar-11, 8:25 am)
சேர்த்தது : பாலமுதன் ஆ
பார்வை : 4620

மேலே