ஆண் - பெண்

"என் பெண்ணை ஒரு ஆண் மகனாய் வளர்ப்பேன்"
என்று மார் தட்டிக்கொள்ளும் பெற்றோர்களும் சரி,
"என் பிள்ளை ஒரு பெட்டையாகி விடுவானோ!"
என்று அழுது துடிக்கும் பெற்றோர்களும் சரி,
'ஆண்' என்றால் பெருமிதத்திற்கும்
'பெண்' என்றால் அவமானத்திற்கும்
உரித்த உரிச்சொல்லாகவே
பார்கிறார்கள்!

எழுதியவர் : வைரன் (24-Jun-14, 11:34 am)
பார்வை : 1618

மேலே