சொர்க்கமே என்றாலும்

"தேய்பிறை தென்றல்
தெவிட்டாத திங்கள்!
மல்லிகைப் பந்தல்
மார்கழி மஞ்சள்!
சிற்றிடை பெண்கள்
சிலிர்ப்பூட்டூம் கொஞ்சல்!
நெத்திலி மீன்கள்
நெய்தலில் மாலை !
மட்டியில் சோறும்
மத்தியான மோரும்
ப்பா!!! கழனியில்
கலப்பையும்! கால்வாயில்
நீரும் !!!கரிசனம்
சேர்க்கும் கூட்டாளிக்
குலவையும்! கொண்டன
சொர்க்கம்! விண்டன
துக்கம்"

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (24-Jun-14, 2:33 pm)
பார்வை : 99

மேலே