மகனே நான் மரமே உன்னை மறவேன்
தலை கோதிட தாயின்றி
தலைவிரி கோலமுடன்
தவித்து கிடக்கிறது மரங்கள்
மழைமுகம் காணாது !!
ஆழ வேரூன்றி
ஆகாயம் நோக்கி தளைத்து
ஆதரவற்ற பறவைக்கு தாயாய்
ஆட்டிப் படைக்கும் மனிதனுக்கும்
நிழல்தந்து இருபிடமானேன் !!
கனியுண்டு களிப்புற்று பின்
கதைமுடிக்கும் கயவரால்
கண்ணீரில் கலையிழந்தேன் !!
யாருக்கு தீங்கிழைத்தோம்
யாவர்க்கும் குடில் தந்தோம்!
உணவாய் பலருக்கு மருந்தாய்
பறவைக்கும் பழவிருந்தாய்...!
எம்மேனியின் வலியெல்லாம்
உனக்காக சுமந்தோம்!
தான் பெற்ற பிள்ளைகளை
பிறர்க்காக தந்தோம் !
தந்த தவிப்பிலும் மகிழ்ந்தோம் !!
உனக்காக தென்றலின் தழுவலில்
கற்பினை இழந்தோம்!
கார்மேக கயவர்க்கு முந்தி விரித்தோம்!
வீரிய நீர் விழுந்து இம்மண்ணில்
மழையாகட்டும்! உயிர்களுக்கு
தாகம் தீரட்டும்! என்பதே நோக்கம்!!
உமக்காக வாழ்விழந்தவளை
மதிக்காவிடினும் பரவாயில்லை!!
அடியோடு ஒழிக்க துணிந்தீரே?
நன்றிமறவா நல்ஜென்மங்களே!!
கண்ணில் காந்தல் வந்தும்
கரித்து கொட்டும் மனம் எமக்கில்லை
என்னால் வளர்ந்த பிள்ளையல்லவா ?
எமக்கே எமனானாலும் தாய் மனம் மாறுமா ?
ஆறடி குழி எமக்கு பறித்தாய்
ஆதரவற்ற உயிரையும் பிரித்தாய்
ஆனாலும் உமக்காகவே எம் பரிதாபம்
ஆளபிறந்து அழிகின்றாயே!! பின்
அழுகின்றாயே!!அழுகும் உடலில்
ஆணவத்தை விடு! வானம் தொட வாழ்!
நான் வீழ்ந்த போதும் நீ வாழ வேண்டும் !