எங்கள் தோட்டம் புனல்வேலி - கண்மணி சேகரன்

நான் நுழைந்தால் நெகிழ வைக்கும் -என்
நா நரம்பிற்கு சுவையளிக்கும்

ஓரடி வீதம் ஒரு முத்தம் -நான்
வெளியேறும் வரை பஷ்ஷிகளின் சத்தம்

உள்ளிருந்தால் பசி அறியாது
உறங்கினாலும் கூட நமக்கே தெரியாது

வாய்க்காலில் தண்ணீர் சத்தம்-என்
செவியோரம் தேன் வடியும் நித்தம்

கடல் இல்லா அலை(காற்றின்) சத்தம் -நான்
கலங்கினாலும் என் கண் துடைக்கும்

பூக்களை சுமந்து காற்று செல்லும் - மெல்ல
என் காதிலோர் கதை சொல்லும்

சின்னஞ்சிறு செடியும் நடனமாடும் -என்
பிஞ்சு விரல் தீண்ட அடம் பிடிக்கும்

துள்ளித் திரிந்தோடும் அணில்களும்
தென்னம்பூ கொறித்து அர்ச்சதை தூவும்

வா என் செல்லமே என்று தூக்க
வாழை தாயை போல் கை நீட்டும்

தேக்கு தூளி கட்டி தாலாட்டும்
தென்னை இளநீரால் பாலூட்டும்

பட்டென்று பாம்பு வந்து பயங்கட்டும்
பறவைகளெல்லாம் பட படவென்று சிறகடிக்கும்

நான் பயந்தாலும் பலசாளியனேன் -இனி
தீயவை கண்டு அஞ்ச மாட்டேன்

என் நந்தவனத்து நாவல் -எங்கள்
தோட்டத்தின் நிழலுக்கே காவல்

என் தோட்டத்து திண்ணை - நான்
அமர வரம் கேட்கும்
நாள் கணக்கில் தவமிருக்கும்

என் தோட்டத்து தேன்சிட்டோ - தன்
காதல் சொல்லாது தப்பி செல்லாது
தவறியும் கூட பொய் சொல்லது

ஓர் உயர்ந்த மரத்தில் கிளி நின்று
ஊர் கேட்க உண்மை சொல்லும்

என்னை விட இந்த கண்மணி அழகு - இனி இல்லை
உலகத்தில் உன்னை விட ஓர் பெண்ணழகு

எங்கள் தோட்டத்தை காண வாருங்கள் !
உங்கள் துக்கத்தை தொலைத்து பாருங்கள் !

கண்மணி
(24.6.2008)

எழுதியவர் : கண்மணி சேகரன் (24-Jun-14, 1:58 pm)
பார்வை : 137

மேலே