பாதத்தோடு பயணம் முடிக்க
கடைக்கு போனால் கைப்பிடி
கடற்கரைக்கு போனால் காற்படி
பள்ளிக்கு போனால் அரைப்படி
பால் வாங்க போனாலும் அப்படி
முச்சந்திக்கு போனால் முக்கால்படி
முந்தி செல்ல நினைக்கையில் முழுப்படி
எரிபொருள் சேமிக்கலாம் இப்படி
இதற்காய் நடக்கலாம் கடைப்பிடி
மிதிவண்டி வேகத்தில் ஓடிப்பிடி
மீட்கலாம் இயற்கையை வாழ்க்கைப்படி
சிக்கனம் என்பது சொல்லும்படி
செலவழிக்க தேவையில்லை செல்லும்படி