மாமன்
சேலை கட்டி அமர்ந்து
விட்டு
ஓலை கட்ட அழைத்து
விட்டாய்.............!
மாமன் என்ற வார்த்தைக்குள்ளே
மல்லிகை மணம்
வீசியது பெண்னே......
ஓலையின் ஓட்டைவழி
பார்க்கையிலே
ஒற்றை பூவாய்
வீற்றிருந்தாய்........!
என் விழிகள் எட்டி
பார்கிறது உன் முகமோ
புதுவெட்க்கம் வந்து
பூக்கிறது
மருதாணி கையில் இருக்க
இது என்னடி ஆச்சரியம்
உன் முகமெல்லாம்
சிவக்கிறது..........!
அட வெட்கமா
அய்யோ...........!
நீ பருவம் வந்து
நாணுகின்றாய்
ம்ம்ம். .........
நான் இன்று தானடி
என் பருவமாற்றத்தையே
காணுகின்றேன்..........!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
