தோல்வியினை வரவேற்பேன்

பந்தைப்
பந்துகொண்டு
பந்தாடும்
பைங்கிளியே!

உன்விழிகள்
என்மனத்தை
உதைபந்தாய்
வதைக்குதடி!

உந்தன் கால்களுக்குள்
உருண்டோடும் மனப்பந்து!
தந்தக் கைகளுக்குள்
தான்பிடித்துக் கொள்வாயோ?
எந்தக் கூடைக்குள்
எடுத்தொளித்து மறைவாயோ?

இதயப் பந்தெடுத்து
எட்டாமல் போறவளே!
இந்த விளையாட்டில்
என் தோல்வி நிச்சயமே!
இருந்தாலும் வரவேற்பேன்!
இனி நான் உன் கைகளிலே!
==++==

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (24-Jun-14, 9:04 pm)
பார்வை : 52

மேலே