பின்னோக்கி நான்

..."" பின்னோக்கி நான் ""...

நிகழ்கால நீட்டல்களில்
நினைவிலிருக்கும் நீரோட்டம்
நீந்திட நினைத்துவிட்டால்
நிமிடங்கள் நீட்டாது
மலரும் நினைவுகளது
மழலையின் நிலையது
மனங்கள் குடியிருந்த
மலர்களின் கூட்டமது
அடம்பு கொடியருத்து
அழகாய் கோர்த்தெடுத்து
வஞ்சனையேதுமின்றி
வண்டியோட்டிய பருவமது
பக்கத்து வீட்டுப்பிள்ளையோடு
பல்லாங்குழி விளையாட்டு
அருசியும் பருப்பும் ஆளுக்கு
கொஞ்சமென எடுத்துவந்து
கொல்லைக்காட்டு ஓரமாய்
கூடி சமைத்த கூட்டஞ்சோறு
உப்பு காரம் இல்லையெனும்
உணர்வுபொங்க சாப்பிடுவோம்
பள்ளிக்கூடம் நாட்கலென்றால்
படுக்கைவிட்டும் நகர்வதில்லை
விடுமுறையென்று சொன்னால்
விடியுமுன்னே எழுந்திருப்போம்
மரக்கிளையில் கயிறுகட்டி
மணிக்கணக்கில் ஊஞ்சலாடி
மாந்தோப்பில் கல்லெறிந்து
மாட்டிக்கொண்ட காலமது
மழலைக்கால நிகழ்வுகளை
மறந்திடத்தான் முடியலீங்க,,,,,

என் மலரும் நினைவுகளோடு,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-Jun-14, 11:55 am)
பார்வை : 76

மேலே