தாய் பறவை
காடுமலைத் தாண்டி வந்தேன்
கல்மலையில் முட்டை யிட்டேன்
நானிட்டது நான்கு முட்டை
பொறித்தது மூன்று குஞ்சு
மூத்த குஞ்சுக்கு இறைதேடி..
மூன்றுமலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சுக்கு இறைதேடி..
நான்குமலை சுத்தி வந்தேன்
கடைக் குஞ்சுக்கு இறைதேடி..
நான் காட்டுவழி போகையிலே..
என்னைக் கண்ட வேடன்மகன்
குறிவைத்து எய்த கனை..
என்னுயிர் கொண்டு போனாலும்..
கடைக் குஞ்சே நீ..
கதறி அழக் கூடாது !
வாழும் குருவியே நீ.. வருந்தி அழக் கூடாது !
வாழ்க்கை என்ன பெருஞ்சுமையா..
அதைச்சுமக்க பலமும் இருக்கிறதில்லையா..
அறிவு ஜந்து என்றாலும்..
தன் மரண நேரத்திலும்
தன்பிள்ளை அழக் கூடாதென்ற..
தாயன்பு மாறுவ தெங்கே !