தாய்

பத்து மாதம் பார்த்து பார்த்து சுமந்தாய்
இறைவனிடம் வரம் வேண்டி வலி வென்று எனை ஈன்றாய்...

முதல் முதலாய் பார்த்தாய்
தந்தையை காண்பித்தாய்

முத்தம் பதித்து சூட்டை தந்தாய்
ரத்தத்தை பாலாய் தந்தாய்
நித்தம் பேணி காத்தாய்

அழுகுறளை கண்டு துடித்தாய்
எறும்பு கடித்ததா என்ன நடந்தது என்று தவித்தாய் ...

கோடைக்கு குடையாய்
குளிர்க்கு போர்வையாய்
உன் சீலையை தந்தாய்
எனை நித்தம் உன் இடுப்பிலே சுமந்தாய் ...

முட்டி போட்டு நகரும் வேளையில்
முழு நேரமும் ரசித்தாய். உனை மறந்தாய் ...

முதல் முதலில் நிற்கும் போது தூணாயை இருந்தாய்
நடக்க பழகும் போது நடைவண்டியாய் மாறினாய் ...

இரவிலே தூக்கம் கலைந்து
என் ஏக்கம் போக்கி
பால் குடுத்து
மார்பிலே சுமந்தாய்...

என் பிஞ்சு பேச்சை கவிதையாய் ரசித்தாய்
என் பேச்சுக்கு மொழி குடுத்தாய்

பால் குடுத்து பசியாற்றி என்
பிஞ்சு விரல் நகம் கடித்தாய்
தாய் உணர்வையும் தமிழ் உணர்வையும் தாலாட்டாய் ஊற்றினாய்

பகுத்தறிவு கற்க பள்ளி பாடம் அறிய
பாட சாலையில் சேற்றாய்
பள்ளி விட்டு வந்த என்னை
பாச கண்ணிராய் வரவேற்றாய்
வம்பு செய்து என் வயிற்றை நிரப்பினாய்
நான் சிந்தி சிதறிய உணவை
உண்டு உயிர் வாழ்ந்தாய்

நான் படித்து பட்டம் பெற்ற பின்னும்
எனை பச்சிளம் குழந்தையாக பார்த்தாய்
எனை சான்றோர் ஆக்கி
ஈன்ற வலியை மறந்தாய்

தாரத்தை பிடித்து என்னை
தாரவாத்தாய்


என்னை தள்ளி வைத்தாய்
வேண்டும் என்றே எனை மறந்து நடித்தாய்
இன்று என் குழந்தையை தூக்கி
திறிந்தாய்
தாய்
தாய்
தாய்
நீயே எல்லாம் எனக்கு செய்தாய்
ஏனோ இன்று எனை மறந்தாய்
என்னை விட்டு பரிந்தாய்
இந்த மண்ணோடு மன்னாய்
கலந்தாய் ......

எழுதியவர் : கிருஷ்ணா (25-Jun-14, 11:12 pm)
Tanglish : thaay
பார்வை : 984

மேலே