அம்மா

அம்மா அம்மா
அம்மாவே ஆருயிரே அழகான தேனருவியே
அய்யாவும் போனப்பின்னே அலை பாய்ந்த எங்களையே


கல்யாணம் முடித்து வைத்து கரை சேர்த்த கதை சொல்லு
காலமெல்லாம் காப்பாற்றிய கணக்கிற்கு விடை சொல்லு


தேளும் தன தாயையே தின்று விட்டு மண்ணில்வரும்
நாளும் நாங்கள் உன்னையே நன்றியின்றி தொல்லைதரும்


என்னை அன்று ஈன்றெடுக்க என்ன தவம் செய்தாயோ
அன்னை ஆன பின்னே அறிந்துகொண்டேன் என் தாயே


தங்கும் இதயம் எங்களுக்கு தர வேண்டும் என் அம்மா
எங்கும் உன் பிள்ளைகளை தாங்கவேண்டும் என் அம்மா

எழுதியவர் : பிரியா nadar (26-Jun-14, 12:57 am)
சேர்த்தது : பிரியா
Tanglish : amma
பார்வை : 289

மேலே