எங்கே போனாய் அம்மா

அம்மா!
எனக்காக நீ சிந்திய ரத்தமும்
எனக்கு நீ தந்த முத்தமும்
இப்போதுதான்
என் நினைவுக்கு வருகிறது!

நீ மரித்துவிட்டாய் அம்மா!
என் மீது உனக்கு
என்ன கோபம் அம்மா?
நீ என்னைவிட்டு
நீங்கிவிட்டாயே
ஏன் அம்மா?

உன் சிரிப்பு
உன் கோபம்
உன் அழுகை
எல்லாம் எங்கே அம்மா?

இந்த உலகத்தில்
நான் பயந்த ஒரே ஆயுதம்
உன் கண்ணீர்தான் அம்மா!

உன் வாசலுக்கு வரும்போது
என்னை வரவேற்கும்
உன் புன்னகைக்காக
நான் எத்தனைமுறை
ஏங்கியிருக்கிறேன் தெரியுமா
அம்மா?

நீ புசித்துவிட்டயா?
அல்லது
பசித்திருக்கிறாயா?
என்று நான் அறியமுடியாத
உன் சலனமில்லாத முகத்தை
இப்போது நினைத்து
ஏங்குகிறேன் அம்மா!

எல்லாம் நீ செய்த தியாகமா?
அல்லது
எனக்காக
நீ நடத்திய யாகமா, அம்மா?

படுக்கையில் கிடக்கும்
என் அப்பாவை
மன்னிக்கவும் அம்மா
உங்கள் பர்த்தாவை
இனி யார் பார்க்கமுடியும்?

அம்மா!
உன் அன்புக்காக
ஏங்கிய எனக்கு
நீ இல்லாத உலகம்
முழுமையான சூனியம்
அம்மா! அம்மா!

ஆகாயத்தில்
வானவில்லில்
வசந்தத்தில்
இலையுதிர்வில்
ஏகாந்தத்தில்
என் இருதயத்தில்
எல்லாம் நீ அம்மா!

எழுதியவர் : மோசே (26-Jun-14, 8:59 pm)
Tanglish : engae ponaai amma
பார்வை : 330

மேலே