உன்னருகில் நான் -நாகூர் லெத்தீப்

மழைத்துளிகள்
உன்மேல் விழுகிறது
ஒரு துளி மட்டும்
மறுக்கிறது............!
உனது வெட்கம்
எத்தனை
தடைகளை செய்கிறது
தடுக்கிறது
என்னோடு பேசிட.......!
எனது ஸ்பரிசம்
புண்ணாடி போனது
உன்னை நினைத்து
நினைத்து வாடுது........!
இதழ் திறந்து
முத்தமிட தயக்கம்
தடைபடாத
மயக்கம்
எனது மனதிலே........!
ஒன்றுமே
தெரியாமல்
நிற்கும் நீ எல்லாம்
தெரியவைத்தாயே
எனக்கு புரியவைத்தாயே
காதலின் ஊடலை..........!
எனது இனியவளே
எனது உள்ளத்தை
பறித்தவள் நீ தானடி
உன்னை மறவேனடி.........!